சுவையான கோதுமை வெங்காய போண்டா செய்ய !!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (16:25 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3  
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

பின்னர் அதனுடன் தயிர்,  பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

இந்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடவும். போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான கோதுமை வெங்காய போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்.. பயனுள்ள தகவல்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்.. பயனுள்ள தகவல்..!

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் உணவு முறைகள்.. பயனுள்ள தகவல்..!

சரும அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆபத்து.. எச்சரிக்கை தேவை..!

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments