Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
வெங்காயம் - 1
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பச்சை பட்டாணி - 50 கிராம்
முட்டைக்கோஸ் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
மிளகு பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு டிஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
 
அரிசி முக்கால் பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவேண்டும். அதன்மீது ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஊற்றி தண்ணீரை வடித்தவும், பிறகு ஒரு தட்டில் சாதத்தை உலர விடவேண்டும். கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 
பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும், பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்கி, அத்துடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
பிறகு குடைமிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கவும். பிறகு முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும். அது வதங்கிய பிறகு சாதத்தை போட்டு கிளறவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
 
பிறகு மிளகு பொடி சேர்த்து கிளறவும், அதன்பின் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் தயார். 

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments