Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் சுவையான வடைகறி செய்ய !!

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (14:02 IST)
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப் (ஊற வைக்கவேண்டும்)
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய - 2
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 டீஸ்பூன்
மல்லி தூள் (தன்யா)  - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

முதலில் தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஊறவைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் வடைகளை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி தயார்.

தொடர்புடைய செய்திகள்

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments