Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருசியான உருளைக்கிழங்கு போண்டா செய்ய....!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு - வேக வைத்து தோலுரித்தது
பச்சைப் பட்டாணி - 1 கப்
எண்ணெய் - ஒரு ஸ்பூன் 
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 3
செய்முறை:
 
உருளைக்கிழங்கு நாலைந்து எடுத்து வேக விடவும். பச்சைப் பட்டாணியும் எடுக்கலாம். காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து குக்கரில் கிழங்குடனேயே  வைத்துவிடலாம். வெந்த கிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து பச்சை  மிளகாய், இஞ்சி துண்டுகளையும் போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் விரும்பினால் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். கொஞ்சம் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
 
கடைசியாக வெந்து மசித்த கிழங்கை சேர்த்து உப்பு போட்டு கெட்டியாக கிளறி இறக்கவும். சிலர் எலுமிச்சம் பழச்சாறு சேர்ப்பார்கள். கலவை நன்றாக ஆற  வேண்டும். இப்போது மேல் மாவு தயார் செய்து கொள்ளலாம்.
 
ஒரு கப் கடலை மாவு என்றால் அரை கப் அரிசி மாவு சேர்க்கலாம். மாவுக்கு ஏற்ற உப்பு, காரத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பின்ச் சோடா மாவு போட்டு  பஜ்ஜிக்கு கலப்பது போல கலக்கவும். ஆறிய கிழங்கு மசாலாவை ஒரேயளவு உருண்டையாக அழுத்தமாக உருட்டிக்கொண்டு மாவில் தோய்த்து எண்ணெய்யில்  பொரித்தால் போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments