சுவையான பன்னீர் பாப்கார்ன் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 150 கிராம்
கார்ன் பிளக்ஸ் - 100 கிராம்
மைதா மாவு  - 3 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 4 (அரைத்து)
வெங்காயம் - 1/2 (அரைத்து)
மிளகு தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை: 
 
முதலில், பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி கொள்ளவும்.
 
பின், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ளவேண்டும்.
 
பின், ஊறவைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டி எடுக்கவும். பன்னீரை தனித்தனியாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும். இதனை ஒரு அரை மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீரை பிரிட்ஜில் இருந்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். இதனை அப்படியே சூடாக பரிமாறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments