Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பச்சை பயிறு குழம்பு செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பச்சை பயறு - 1/2 கப் 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
மல்லித் தழை - சிறிது 

அரைக்க தேவையான பொருட்கள்:

 
தேங்காய் துருவல் - 1/4 கப் 
முந்திரிப்பருப்பு - 5
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
பெரிய வெங்காயம் - 1
 
செய்முறை:
 
பச்சை பயறை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி  வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும். தேங்காய்  துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்  போடவும். பிறகு வெங்காயம்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி  அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
 
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, அவித்து வைத்துள்ள பச்சை பயறு சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விட்டு இறுதியில்  மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும் சுவையான பச்சை பயறு கிரேவி தயார். இவை பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments