சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
மிளகு - 20
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 
 
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

அடுத்த கட்டுரையில்
Show comments