சுவையான மற்றும் கரகரப்பான வெங்காய பக்கோடா செய்ய !!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:11 IST)
தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவேண்டும்.

பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெய்யை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும். மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெய்யை வடியவிட்டு எடுக்கவும். சுவையான கரகரப்பான வெங்காய பக்கோடா  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments