Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சீஸ் பராத்தா செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
துருவிய சீஸ் - 1 கப் 
வெங்காயம் - 1 கப் 
பச்சை மிளகாய் - 4 
நெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
கோதுமை மாவு- தேவையான அளவு 
பூண்டு - 5 
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி 
கரம் மசாலா - 2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - தேவையான அளவு 
செய்முறை:
 
முழுகோதுமை மாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவு தேவையான எண்ணிக்கையில் உருண்டையாக உருட்டி கொள்ளவும். 
 
ஒரு பௌலில் சீஸை துருவி எடுத்துக் கொண்டு, அதில் பூண்டு, உப்பு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், காய்கறிகள், வெங்காயம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 
பிசைந்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துள்ள கலவையை வைத்து, ரொட்டி தேய்த்து கொள்ளவும். பராத்தா நன்கு வருவதற்கு உலர்ந்த  மாவை சேர்த்துக் கொள்ளலாம்.  
 
அடுப்பில் பேன் வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும் அதில் தேய்த்து வைத்த சில்லி சீஸ் பராத்தாவை சேர்த்து சூடாக தயார் செய்யலாம். இந்த சில்லி பராத்தாவை, வெண்ணெய், புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வெயில் நேரத்தில் மயக்கம் வருவது ஏன்?

அக்னி நட்சத்திர வெயில் நேரத்தில் என்னவெல்லாம் செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments