Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த கேரட் கூட்டு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி  
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி 
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 2 பல் 
கேரட் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி 
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:
 
கேரட் பொரியல் செய்ய முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் சுத்தம் செய்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ள வேண்டும். 

பின்னர் கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காய தூள் சேர்த்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து  வதக்கவும். 
 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பூண்டை தட்டி சேர்த்து கொள்ளவும். பிறகு துருவிய கேரட், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  கேரட் வேக சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சேர்க்கவும். 
 
கடைசியாக வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் அடுப்பை அணைத்து விடலாம். சுவையான கேரட் பொரியல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதய நோய்களை வெல்ல உடற்பயிற்சி: ஒரு முழுமையான வழிகாட்டி

கணையம் பாதிப்புக்கு என்னென்ன காரணங்கள்? மது அருந்துதல் மட்டுமா?

இளநீரை வெறும் வயிற்றில் அருந்தக் கூடாதா? அருந்தினால் என்ன ஆகும்?

பெண்களே உஷார்! Hair Dye பயன்படுத்துவதால் புற்றுநோய்? - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments