Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லி சப்பாத்தி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சப்பாத்தி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர் - 1 துளி
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்ன சின்னத் துண்டுகளாக்கி கொள்ளவெம். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக  நறுக்கி கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும். பிறகு அதில் சப்பாத்தி  துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்து கொள்ளலாம். 
 
சுவையான சூப்பரான மாலை நேர சிற்றுண்டி சில்லி சப்பாத்தி தயார். இதனுடன் அசைவ பிரியர்கள் முட்டைகளை சேர்த்து சமைத்தால்  முட்டை சில்லி சப்பாத்தி செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments