கோவைக்காய் துவையல் செய்ய...

Webdunia
தேவையானவை: 
 
கோவைக்காய் - 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்)
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு
சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
கோவைக்காயை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். மெல்லிய சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். 
 
பின்பு அதே எண்ணெயில் கோவைக்காயை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வேகும் வரை வதக்கவும். புளியை சேர்த்து ஒரு  முறை புரட்டி எடுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்த்தால் கோவைக்காய் துவையல் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன?... இரவில் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!...

பல நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!...

உடல் ஆரோக்யத்தை கெடுக்கும் பர்கர், பீட்சா!... அதிரவைக்கும் உண்மைகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments