Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொண்டை கடலை குழம்பு செய்ய...

Webdunia
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
 
சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
துண்டாக்கப்பட்ட தேங்காய்  - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு  - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
 
தேவையான பொருட்கள்:
 
கருப்பு கொண்டை கடலை - 1 கப்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கீற்று
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
கடுகு - 1/2 தேக்கரண்டி
உடைந்த உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - தேவையான அளவு

 
செய்முறை:
 
ஒரு கடாயில் “அரைப்பதற்கு” கீழ் உள்ள பொருட்கள் எண்ணெய் சேர்த்து வறத்து, அவைகளை நன்கு பேஸ்டாகும் வரை  அரைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் கொண்டு கறிவேப்பிலை, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து  வதக்கவும்.
 
பின்னர் நறுக்கப்பட்ட சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு சமைக்கவும். இப்பொது சிறிது உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து நன்றாக  கிளறவும். பிறகு தக்காளியுடன் சிறிது உப்பை சேர்த்து நன்றாக மசியும்வரை சமைக்கவும். இப்போது அரைத்த மசாலாக்களை  சேர்த்து மீதமான சூட்டில் கலக்கவும். உப்பை சரிபார்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குழம்பு நிலைக்கு கொண்டுவரவும்.
 
இறுதியாக வேகவைத்த கடலையை சேர்த்து நன்றாக சமைக்கவும், சமைத்தபின் நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லியை சேர்த்து  அழகுபடுத்தவும். சுவையான கொண்டை கடலை குழம்பு தயார்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments