Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து கஞ்சி...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
தோல் உளுந்து - 1/2 கப் 
பச்சரிசி - 1/4 கப் 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
கருப்பட்டி - 1/4 கப் 
பூண்டு பற்கள் - 4
வெந்தயம் - 1 தேக்கரண்டி 
உப்பு - 1/4 தேக்கரண்டி

 
செய்முறை:
 
தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப்  தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.
 
குக்கரில் உளுந்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு மற்றும்  வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
    
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் இறக்கி ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். பிறகு  அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.  கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும். சுவையான உளுந்தங் கஞ்சி தயார். உடலுக்கு சக்தியை தரக்கூடிய ஒரு உணவு வகை. நீங்களும் சமைத்து சாப்பிட்டு பயன் பெறுக.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments