சுலபமான முறையில் சீடை செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள் :
 
அரிசி மாவு - 6 பங்கு (6 : 1)
உளுந்து மாவு - 1 பங்கு (வறுத்து பொடித்தது)
எள்ளு - 1 டி ஸ்பூன்
உப்பு  - தேவைக்கு ஏற்ப
வெண்ணெய் - 50 கிராம்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் (ஊறவைத்தது)
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
 
அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உளுந்து மாவு, கடலை பருப்பு, உப்பு, எள்ளு,  வெண்ணை, பெருங்காயம், போட்டு நன்றாக கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். மிகவும் தளர பிசைய வேண்டாம்.
 
ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணெய்யை காய வைத்து  எண்ணெய் கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும். வெந்த சீடை மிதந்து மேல வரும். 
குறிப்பு:
 
வெடிக்காமல் சீடை பொரிப்பது எப்படி என்றால்? அரிசி மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். கடையில் கிடைக்கும் அரிசி  மாவில் கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணெய் மேலே தெரிக்கும்.
 
உளுந்து ஒரே சீராக வறுத்து மாவாக அரைத்துக் கொள்வது அவசியம். எண்ணெய் அதிக சூடாக இல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் அனைத்து சீடைகளும் வெடிக்கும், அல்லது உள்ளே வேகாமல் வெளியே கருகி இருக்கும்.
 
சீடையை உருட்டும்போது அதிகம் அழுத்தாமல், கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். அப்படி உருட்டினால் விரிசல் விடாது. இதனால் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது. இவை அனைத்தையும் மீறி உங்களுக்கு பயமாக இருந்தால், உருட்டிய  மாவு எண்ணெய் உள்ளே போட்டு, மேலே மூடியை மூடி வைத்து பொரிக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

அடுத்த கட்டுரையில்
Show comments