Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத சுவையில் தட்டை செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 2 பற்கள்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை
 
புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போதே அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தெடுக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். 
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாக தட்டவும்.
 
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாக போட்டு வேகவைக்கவும். ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆறவிடவும். சுவையான, மொறுமொறுப்பான தட்டை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments