Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஜ் ஸ்பிரிங் ரோல் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு, நவதானிய மாவு - தலா அரை கப்
முளைகட்டிய நவதானியம் - ஒரு கப்
முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - ஒன்று
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு,  நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். 
 
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை,  புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.
 
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். 
 
பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து  எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆண்களுக்கு பிரச்சனை தரும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக என்ன செய்ய வேண்டும்?

சிசேரியன் செய்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்புவலி வருமா?

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரிக்காய்.. சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments