Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லச்ச கொட்டை கீரை கூட்டு செய்வது எவ்வாறு...!

Webdunia
நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை, நஞ்சுண்டான் கீரை என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த கீரை மூட்டு வலியை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. சிறு மரமாக வளரும். இலைகள் பெரிதாக இருக்கும். நகரங்களில் இதை அலங்கார மரமாக வளர்க்கிறார்கள்.

 
வீட்டின் முன்னால் அழகுக்காக வளர்க்கப்படும் இச்செடியின் மருத்துவ குணம் தெரிவதில்லை. இதன் கீரை சமையலில்  சேர்த்துக் கொள்ள தகுந்தது. இந்த கீரையில் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். கீரை மசியல் (கடைசல்) செய்யலாம். நச்சு கொட்டை கீரையில் உப்பு, புளி, மிளகாய், துவரம் பருப்பு சேர்த்து துவையல் செய்யலாம். சுருக்கமாக சொன்னால் நாம் மற்ற கீரைகளை பயன்படுத்தி என்ன சமையல் செய்வோமோ அத்தனையும் நச்சு கொட்டை கீரையில் செய்யலாம். 
 
கைப்பிடி அளவு பாசி பருப்பை ஊற வைக்கவும். நஞ்சு கொண்டான் கீரைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும். இந்த கீரையை சுத்தம் செய்ய இதன் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட வேண்டும். கத்தியால் கீறிவிட்டு நரம்பை எடுத்து விடலாம். நரம்பு நீக்கிய கீரையை, பொடிப் பொடியாக நறுக்கவும்.
 
பாசி பருப்பு, நறுக்கிய நச்சு கொண்டான் கீரை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கீரை நன்கு மசித்து மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு போட வேண்டும். சாம்பார் பொடி வாசனை மாறும்வரை கொதிக்க விடவும். சாம்பார் பொடியின் பச்சை வாசனை மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி, கடுகு, உளுத்தம்  பருப்பு தாளித்து கொட்டவும். நஞ்சு கொண்டான் கீரை கூட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments