Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழி பணியாரம் செய்ய...!!

Webdunia
தேவையானவை: 
 
பச்சரிசி மற்றும், புழுங்கலரிசி - தலா ஒரு கப்
உளுந்து - அரை கப்
ஜவ்வரிசி - கால் கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு  - தேவையான அளவு
செய்முறை: 
 
பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும்.  அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 அல்லது 6 மணி நேரம்  புளிக்கவிடவும். 
 
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து,  வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். 
 
குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால், சுவையான குழி  பணியாரம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments