Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேழ்வரகு அடை செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கேழ்வரகு மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - 5 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
செய்முறை:
 
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், இடித்த பூண்டு ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் கொட்டவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து பிசையவும். மாவு  சப்பாத்தி மாவை விட சற்று தளர இருக்க  வேண்டும்.
 
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வட்டமாக அடையைத் தட்டவும். 

ஒரு டீஸ்பூன் எண்ணெயை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான கேழ்வரகு அடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments