சுவையான ஓம பொடி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன் 
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - ஒரு கையளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு
 

செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய், பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஓமத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை வடிகட்டி, பிசைந்து வைத்துள்ள மாவில் சேர்த்து மென்மையாக  பிசைந்து கொள்ள வேண்டும். 
 
பிறகு சிறு துளையுள்ள முறுக்கு உழக்கில், சிறிது வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை மூடி எண்ணெய்யில் நேரடியாக பிழிய வேண்டும். 
 
பின்பு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இதுப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்துக் கொள்ளவேண்டும். இறுதியில் கறிவேப்பிலையை அந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து, ஓம பொடியுடன் சேர்த்து, கையால் உதிர்த்துவிட்டால், ஓம பொடி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments