Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான மைசூர் போண்டா செய்வது எப்படி...?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (14:17 IST)
தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது,
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின் நெருப்பை மிதமாக வைத்து, எண்ணெய்யில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments