சுவை மிகுந்த ஜீரா புலாவ் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
நெய் - 2 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1

செய்முறை: 
 
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.
 
சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி  மூடி போட்டு மூடவும். 
 
நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும். நீராவி அடங்கியதும் மூடியை  திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் தயார். இவை குருமாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

அடுத்த கட்டுரையில்
Show comments