Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான எக்லெஸ் கேக் செய்வது எப்படி...?

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (17:38 IST)
தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை பொடி - 1/4 கப்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
உப்பு - 1 கப்



செய்முறை:

முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும். உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் பேக்கிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள ஸ்பூன் மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

பிறகு கேக் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும். இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், எக்லெஸ் கேக் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments