Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் சுவையான கோஸ் வடை எவ்வாறு செய்வது...?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு என்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை தயார். காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும். மிகவும் எளிதான முறையில் சுவையான கோஸ் வடை சீக்கரத்தில் தயார் செய்திடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments