வேர்க்கடலை புளிக்குழம்பு

வேர்க்கடலை புளிக்குழம்பு

Webdunia
தேவையானவை: 
 
வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்),
தேங்காய் துண்டுகள் – 2 அரைக்க
கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் 
புளிக் கரைசல் - 1 கப் 
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் 
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் 
கறிவேப்பிலை – சிறிதளவு 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


 
 
செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
 
வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.
 
சுவையான சத்துள்ள வேர்க்கடலை குழம்பு ரெடி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments