Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

Webdunia
இஞ்சி அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக உள்ளது.
 
தேவையான பொருட்கள்:
 
இஞ்சி - 20 கிராம்
தனியா - 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு
புளி கரைச்சல் - 1 கப்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
இஞ்சியைத் தோல் சீவி, துருவி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். பின்னர் தனியா, உளுந்தம் பருப்பு,மிளகாயுடன், தேங்காயையும் சேர்ந்து வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில்  சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு  தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், தனியா, மிளகாய் அரைத்த விழுது, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
 
இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். சுவையாகவும் சத்துக்கள் நிறைந்தும், ஜீரணத்துக்கு நல்லது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments