Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

Webdunia
1. அவல் போண்டா
 
* ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


 
 
2. பேபி கார்ன் 65
 
* பூண்டு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
 
* பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
* பின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
 
* பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 

 



3. சென்னா மசாலா
 
* சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.
 
* தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்.
 
* இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும், பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.


 
 
* இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும்.
 
* மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக சேரும்வரை வதக்கவும்.
 
* சாட் மசாலா, சென்னா மசாலா பவுடர் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். பரிமாறும் போது ஒரு துண்டு எலுமிச்சைபழம் வைக்கவும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments