Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானி பூரி செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ரவை - 1 கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மைதா - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 
பானி (மசாலா தண்ணீர்) செய்ய:
 
புதினா, கொத்தமல்லி இலை - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - 1 டீஸ்பூன் (வறுத்தது)
ப்ளாக் சால்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இனிப்பு பானி செய்ய:
 
கொஞ்சம் புளி, பேரிச்சம் பழம், சிறிது வெல்லம், மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து  கொண்டால் இனிப்பு சட்னி தயார். தேவைப்படுபவர்கள் இந்த சட்னியை கலந்து கொள்ளலாம். இல்லையெனில் பானி மட்டும் போதும். புளியை 1/2 கப்  தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் அந்த புளி தண்ணீரில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர்  கலந்து வைத்து கொள்ளவும்.
 
பூரி செய்ய:
 
ரவை, மைதா, சோடா உப்பு, கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி இடுவது போல் தேய்த்து சிறிய மூடியை வைத்து ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் சூடு செய்து பூரியை பொரிக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments