Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்ஸ் அடை செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - அரை கப்
ஓட்ஸ் - அரை கப்
துவரம்பருப்பு - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

 
செய்முறை: 
 
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்றாகவும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், உப்பு  சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 
 
ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,  கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான் அளவு உப்பு சேர்த்து, நன்கு  கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும். சுவையான  சத்தான ஓட்ஸ் அடை தயார்.
 
குறிப்பு:
 
ஓட்ஸ் அடையில் தேவைப்பட்டால் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம். சுவை அற்புதமாக  இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments