Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி தெரியுமா...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் துண்டுகள் - 200 கிராம்
பெரிய தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி  மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6 
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கஸ்தூரி மேத்தி இலை - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
                      
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - சிறிது 
ஏலக்காய் - 2
 
                                          
செய்முறை:
 
பன்னீரை சதுரமாக வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி  வெண்ணெய் போட்டு சூடானவுடன் பன்னீர் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வதக்கி வைக்கவும்.
 
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளியை தனி தனியாக போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் தனி தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போடவும். பிறகு  இஞ்சி பூண்டை பேஸ்ட்  சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காய விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.   
                                   
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.  
 
மசாலா வாசனை அடங்கியதும் முந்திரி பருப்பு கலவை, கரம் மசாலா, கஸ்தூரி மேதி இலை சேர்த்துக் கிளறவும். பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார். இவை சப்பாத்தி, பரோட்டா,  நான் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

அடுத்த கட்டுரையில்
Show comments