Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிஃப்ளவர் பக்கோடா செய்ய தெரியுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
காலிஃப்ளவர் - 3 கப் (வேக வைத்தது) 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப 
கடலை மாவு - 1/2 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கேசரி கலர் - ஒரு சிட்டிகை


 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு  கலந்து கொள்ள வேண்டும். பின்னர் காலிஃப்ளவரை போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொருமொருவென்று வரும் காலிஃப்ளவர் பக்கோடா  தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments