Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னா பன்னீர் கிரேவி

சென்னா பன்னீர் கிரேவி

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சென்னா - ஒரு கப்
பனீர் - 3/4 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
பிரியாணி இலை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

 
செய்முறை:
 
சென்னாவை வேக வைத்து எடுக்கவும். பன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
 
இத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அலவு ஊற்றி மசாலா வாசனை போகம் வரை கொதிக்க விடவும். இத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக எடுத்து பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். சுவையான சென்னா பன்னீர் கிரேவி தயார்.

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments