கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய...

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (18:12 IST)
தேவையானவை: 
 
துருவிய கோஸ் - ஒரு கப் 
உருளைக்கிழங்கு - 2 வேக வைத்து மசித்தது
பன்னீர் துருவியது - அரை கப் 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் 
பிரெட் தூள் - கால் கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments