Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெட் வெஜிடபிள் புலாவ்

பிரெட் வெஜிடபிள் புலாவ்

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - 1/2 மூடி
அரிசி - 2 கப்
ரொட்டித் துண்டுகள் - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3 பெரியது
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 6
புதினா - சிறிதளவு
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
நெய் - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ரொட்டித் துண்டுகள் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* காரட், பீன்ஸ், காலிபிளவர் இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்,
* அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினாவை சேர்த்து வதக்கி, வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளையும், பட்டாணியையும் போட்டு அரிசி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
* காய்கறிகள் நன்றாக வெந்து தண்ணீர் இல்லாமல் ஆன பிறகு பொரித்தரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
* தேவையானால் வாசனைக்கு 2 டீஸ்பூன் நெய் விடலாம். எளிய முறையில் செய்யக்கூடிய புலாவ் இது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments