Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த வகை கார குழம்பும் செய்திடலாம் இந்த புளிக்குழம்பு பொடி இருந்தால்...

Webdunia
தேவையான பொருள்கள்:
 
மிளகாய் வத்தல் -100 கிராம்
மல்லி - 150 கிராம்
சீரகம் - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
கடலைப் பருப்பு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
கறிவேப்பிலை - 1 கப்

 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும்  தனித்தனியே போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
 
அடுப்பை ஆப் பண்ணி விட்டு கடாயில் இருக்கும் சூட்டில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
 
சீரகத்தை வறுக்க தேவை இல்லை. அதை வறுத்த பொருள்களுடன் சேர்த்து கலந்து விட்டு அனைத்தையும் ஆற விடவும். ஆறிய பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து 5 மாதங்கள் வரை  வைத்து உபயோகிக்கலாம்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments