Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 50 மில்லி
கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய் - 25 மில்லி

 
செய்முறை:
 
தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக்  கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்  மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
 
ஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments