Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்தி வெஜிடபில் கொழுக்கட்டை

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2013 (15:29 IST)
FILE
உருளைக் கிழங்கில் அதிக அளவில் ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

1. மைதா - 2 கப்
2. வெண்ணெய் - 1/4 கப்
3. உருளைக்கிழங்கு- 2
4. கேரட் - 1
5. பீன்ஸ் - 10
6. முட்டைக்கோஸ் - சிறியது
7. காலிஃபிளவர் - சிறியது
8. பட்டாணி - 1/2 கப்
9. பொடித்த பச்சை மிளகாய் - 2
10. வெள்ளைப் பூண்டு - 2 பல்
11. பொடியாக நறுக்கிய இஞ்சி -சிறிதளவு
12. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
13. வெங்காயத்தாள் - சிறிதளவு
14. சில்லி சாஸ் - சிறிதளவு
15. சோயா பீன்ஸ் சாஸ் - சிறிதளவு
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, வெண்ணெய் கலந்து அதனுடன் சிறிதளவு சூடான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக் கிழங்கு, கேரட், முட்டைக் கோஸ், காலிஃபிளவர், பட்டாணி ஆகியவற்றை தண்ணீர் விடாமல் ஆவியில் வேகவைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பிறகு காய்கறிக் கலவையை சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறிதாக எடுத்து வட்ட வடிவில் உருட்டி அதன் நடுவில் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை வைத்து மடித்து தண்ணீரை தொட்டு ஓரங்களை ஒட்டி இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவேண்டும். வெந்தவுடன் இறக்கி சூடாக பரிமாற வேண்டும்.

சிறப்பு:

FILE
1. உருளைக் கிழங்கில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

2. கேரட்டில் விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளது. கண் பார்வைக்கு நல்லது. உடல் பருமன் ஆகாமல் காக்கும்.

3. பீன்ஸில் புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள் ஆகிய சத்துக்கள் உள்ளது. பித்தத்தை தணிக்கும், பார்வையை தெளிவாக்கும், சருமப் பளபளப்பாகவும், வாயுவை குறையச் செய்யும்.

4. முட்டைக் கோஸில் சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ ஆகிய சத்துக்கள் உள்ளது. ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலை போக்கும். தாது பலப்படும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments