Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளங்கி சாப்ஸ்!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (17:30 IST)
முள்ளங்கியை வழக்கம்போல் சமைக்காமல் இந்த புதுவகையான சாப்ஸ் போல் செய்தால் முள்ளங்கி பிடிக்காது என சொல்பவர்கள்கூட வேண்டுமென்று கேட்டு சாப்பிடுவார்கள்.

தேவையானவ ை:

முள்ளங்கி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
மிளகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முற ை:

மிளகை வெறும் கடாயில் வறுக்கவும்.

அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தோல் நீக்கி, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments