Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பிரெட் பன்னீர் ரோல்ஸ்

Webdunia
FILE
பள்ளி விட்டு திரும்பும் குழந்தைகளுக்கும், அலுவலகத்திலிருந்து திரும்பும் பெரியவர்களும் விருப்பமான ஈவினிங் ஸ்நாக் இந்த பிரெட் பன்னீர் ரோல்ஸ். எப்போதும் போல உப்மா, தோசை போன்றவற்றை செய்து போர் அடிக்காமல், இந்த பிரெட் பன்னீர் ரோல்ஸை செய்து அசத்துங்கள்.

தேவையானவை

பிரெட் - 5 துண்டுகள்
பன்னீர் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

FILE
செய்முறை

பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டிவிடவும்

ஒரு கடாயில் சிறுதளவு எண்ணெய் சேர்த்து, பச்சை மிளகாய், தக்காளி, மிளகு தூள், உப்பு மற்றும் துருவிய பன்னீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இந்த கலவையை தனியாக வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பிரெட் துண்டுகளை போட்டு உடனடியாக கைகளால் அதனை பிழிந்து எடுக்கவும்.

இந்த பிரெட்டை ஒரு தட்டில் வைத்து அதில் பன்னீர் கலவையை அதற்கு நடுவில் வைத்து மெதுவாக சுருட்டி சூடான எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments