Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரீன் ஆப்பிள் சட்னி

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2013 (17:44 IST)
FILE
பெரும்பாலான குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிடுவதென்றால் பிடிக்காது. அவர்களை வற்புறுத்தியும் பழங்களை சாப்பிட வைப்பது கடினம். இதனை சமாளிக்க குழந்தைகளுக்கு பழங்களை அப்படியே கொடுக்காமல், நமது அன்றாட சமையலுடன் சேர்த்து கொடுத்தால் அவர்கள் புதிதாக இருக்கிறது என விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வகையில் முதலில் இந்த க்ரீன் ஆப்பிள் சட்னி செய்து சுவைத்து பாருங்கள்.

தேவையானவை:

க்ரீன் ஆப்பிள் : ஒன்று
பெரிய வெங்காயம் : ஒன்று
இஞசி, பூண்டு : ஒரு துண்டு
மிளகாய்தூள் : ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் : ஒரு டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
வெந்தயத்தூள் : 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை
எலுமிச்சைச்சாறு : ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை : ஒரு டீஸ்பூன்
எண்ணெய் : ஒரு டீஸ்பூன்
உப்பு : தேவைகேற்ப

FILE
செய்முறை:

க்ரீன் ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதில் எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைக்கவும்.

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும். இஞ்சி, பூண்டு கலக்கவும். லேசாக வதங்கிய பின், ஆப்பிள் துணடுகளையும் சேர்த்து, கிளறி விடவும்.

ஆப்பிள் முழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக மசித்துவிடவும்.

மிளகாய்த்தூள், சர்க்கரை சிறிது உப்பு போட்டு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான ஆப்பிள் க்ரீன் சட்னி தயார்.

நன்றி - பசுமை இந்தியா

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments