Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளு சூப்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2013 (18:00 IST)
FILE
நேற்று தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு என்ற தலைப்பில், இன்றைய வளரும் தலைமுறைக்கு மாபெரும் பிரச்சனையாக இருக்கக் கூடிய தொப்பையைக் குறைக்க கொள்ளு எவ்வாறு பயன்படுகிறது என்று வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக கொள்ளு பருப்பில் சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

கொள்ளு - 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் (தாளிக்க) - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments