Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளு குழம்பு

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2013 (19:48 IST)
FILE
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளு பருப்பு எந்தெந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்று எழுதிவருகிறோம். அந்த வகையில் கொள்ளு சூப் செய்வது எப்படி என்று பார்த்தோம். இன்று கொள்ளு குழம்பு செய்யும் முறையைப் பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கருவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு, கத்தரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது), பச்சைமிளகாய், மல்லி, சீரகம், கருவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும். சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments