Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்கார வடிசல்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2012 (17:36 IST)
தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1/2 கி
மு.பருப்பு - 10 திராட்சை - 10
ஏலக்காய் - 15
தேங்காய்த்துருவல் - 1./2 கப்
பால் - 1 ஆழாக்கு காய்ச்சினது
சாதிக்காய், பச்சைக்கற்பூரம் - சிறிது
நெய் - 3 ஸ்பூன்
இலவங்கம் - 4

செய்முறை

வாணலியை (கடாயை) வைத்து 3 ஸ்பூன் நெய்யை விட்டு முந்திரி திராட்சையை வறுத்துக்கொள்ள வேண்டும். பின் ஏலக்காய், சாதிக்காய், இலவங்கத்தைப் பொரித்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் க.பருப்பு, ப.பருப்பு, அரிசி ரவையை லேசாக வறுத்து வேறு ஒரு கனமான பாத்திரத்தில் நீர்விட்டு, மூன்றையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.

வெல்லத்தை சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த பருப்புடன் சேர்க்க வேண்டும். தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கி விட வேண்டும், வறுத்த முந்திரி திராட்சை, சாதிக்காய், ஏலக்காய் பொடி, பச்சை பற்பூர பொடி, பால் ஆகியவற்றைச் சேர்த்து கரண்டியால் கலக்க வேண்டும். நீர் அதிகமாக இருக்கக் கூடாது. அக்கார வடிசல் கூட்டு போன்று இருத்தல் வேண்டும். ஊட்ட சத்து மிக்க அக்கார வடிசல் ரெடி.

குறிப்பு:- பாலை இறக்கியவுடன் தான் விட வேண்டும். மிகச்சூட்டில் விட்டால் திரிந்துவிடும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments