Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்த் ஸ்பெஷல் கேழ்வரகு இட்லி

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2013 (14:58 IST)
இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்( Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து( Dietary Fiber), புரோட்டின்( Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.


FILE
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
உப்பு - 1 தே.கரண்டி

கேழ்வரகு இட்லி செய்முறை :

உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)

புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும். இதனை இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

கவனிக்க :
நாம் எப்பொழுதும் செய்யும் அரிசி இட்லியில், 1:3 அல்லது 1:4 என்ற விகிததில் தான் உளுந்தினை சேர்த்து இட்லி செய்வோம். அதே போல தான் கேழ்வரகு மாவிலும் செய்யவேண்டும்.
மிக்ஸியில் அரைப்பவர்கள் 1:3 என்று சேர்த்து கொள்ளலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments