Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வீட் கார்ன் கபாப்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2013 (15:58 IST)
சத்துடன் சுவையையும் சேர்த்தளிக்கும் ஸ்வீட் கார்ன் கபாபை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

ஸ்வீட் கார்ன் - 2
உருளை கிழங்கு (வேகவைத்து மசித்தது ) - 1 கப்
பன்னீர் (துருவியது) - 1/2 கப்
வெங்காயம் (நறுக்கியது ) - 1/2 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது)- சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி- தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீராக தூள் - 1/2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தின் மீது சிறிது உப்பு தூவி சிறிதுநேரம் அப்படியே வைக்கவும்.

ஸ்வீட் கார்ன் கலவையுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள்,
மஞ்சள் தூள்,தனியா தூள், சீராக தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்கவும்.

உப்பு சேர்த்த வெங்காயத்தை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் இந்த கலவையுடன் கலக்கவும்.

நன்றாக கலந்த பிறகு இந்த கலவையை கட்லட்டுகலாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments