Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவை பழ புட்டு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2011 (18:15 IST)
தேவையான பொருட்கள்:

ரவை - 200 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 3 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு - 2 (இனிப்பானது)
கறுப்பு திராட்சை - 50 கிராம்
தக்காளிப்பழம் - 75 கிராம்
ஆப்பிள் - 1 (சிறியது)
முந்திரி பருப்பு - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய்விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அதை துண்டு களாக உடை‌த்து‌க் கொள்ளவும்.

அதே வாணலியில் ரவையைக் கொட்டி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழம், தக்காளி இவற்றைத் தனித்தனியே சாறு எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

பழச்சாற்றில் அளவாக தண்ணீர் விட்டு அதை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.

பிறகு வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறி பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதமுள்ள 1 மேஜைக்கரண்டி நெய்யை விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.

தேவையென்றால் 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் விட்டு நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, மேலே முந்திரி துண்டுகளை பரவலா க‌ப் போட்டு அலங்கரிக்கவும்.

இதற்குக் கலர், ஏலக்காய் தேவையில்லை.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments