Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்து: தவறான தெருக்குத்து தீய விளைவுகளை ஏற்படுத்துமா...?

Webdunia
வீட்டிற்கு அழகு வாசல். வாசல் முடியும் இடம் சாலைத்தெரு. இந்த சாலைத்தெரு அமையும் இடத்தை பொறுத்து இடம் வீட்டின் தலையெழுத்தே மாறும் என்பது வாஸ்துவில் ஆணித்தரமான உண்மையாகும்.
1. நான்கு திசைகளில்
2. மூன்று திசைகளில்
3. இரண்டு திசைகளில்
4. ஒரு திசையில் மட்டும் கூட சாலைத்தெரு வரலாம்.
 
இவ்வாறு சாலைகள் வரும் இடம் வீட்டின் சாதக, பாதக காரணங்களை ஆராய்ந்து அறிந்த பின்னரே அவற்றை வாங்க வேண்டும்.
 
பஞ்சபூத தத்துவங்கள் அடங்கியது தான் ஒவ்வொரு இடமும்ஃவீடும். எனவே, அத்தத்துவங்கள் சிதைந்து போகா வண்ணம், அதிகப்படியான நேர்மறை விளைவுகளை வழங்கக்கூடிய சரியான, நல்ல தெருக்குத்தை பற்றி நன்கு அறிந்த பின்பே ஒரு இடம்ஃவீட்டை வாங்குதல்   வேண்டும்.
 
திசையை பொறுத்து தெருக்குத்தின் பலன் மாறுபடும். சில திசைகளிலிருந்து வரும் தெருப்பார்வை அபரிமிதமான பலன்களை வாரி வழங்கும். சில திசைகளிலிருந்து வரும் தெருக்குத்து/தெருப்பார்வை தீய பலன்களை கொடுக்கும். எனவே, நல்ல தெருக்குத்து எது? கெட்ட தெருக்குத்து எது? என ஆராய்ந்து அறிந்த பின்னரே இடத்தையோ அல்லது வீட்டையோ வாங்குவது உசிதமான செயலாக இருக்கும்.
 
நல்ல தெருக்குத்து, கடைக்கோடியில் உள்ளவரையும் மாட மாளிகையில் ஏற்றி விட்டு அழகு பார்க்கும். அதேபோல தவறான தெருக்குத்து தீய   விளைவுகளை ஏற்படுத்தும்.
 
சில இடம்/வீடு முழுமைக்குமே தெரு/சாலை வரும். இந்த மாதிரி அமைப்பை அதி கவனத்துடன் கையாள வேண்டும். இந்த அமைப்புள்ள இடத்தை அல்லது வீட்டை வாங்கும்முன் வாஸ்து விதிகளை பின்பற்றி வாங்குவது சிறப்பான ஒன்றாக இருக்கும். நல்ல தெருக்குத்து உள்ள இடத்தை தேர்ந்தெடுக்கும் நபர்களின் வாழ்க்கை, நேர்மறை நகர்வாக இருக்கும்.
 
நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் தவறான அமைப்பில் வீடு இருக்கும் பட்சத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்குமா? மற்றும் தவறான தெருக்குத்து உள்ள இடத்தில் வாஸ்துப்படி வீட்டை அமைத்துக்கொண்டால் என்ன விளைவுகள் நிகழும் என்பனவற்றை எல்லாம் கருத்தில்   கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
 
நல்ல குணநலன்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை நன்றாக பார்த்துக்கொள்வது, விட்டுக்கொடுப்பது போன்ற பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளும்போது நமக்கும் கோடீஸ்வர தெருக்குத்து நிச்சயம் வாய்க்கப்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments