Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்துவிற்கு பஞ்ச பூதங்களுடன் உள்ள தொடர்பு என்ன...?

Webdunia
நாம் எந்த ஒரு கட்டிடம் கட்டும்போதும் அதற்கு பிளான் போடுவதற்கு முன்பு முதலில் வாஸ்து தான் பார்ப்போம். 

எந்தெந்த திசையில் என்னென்ன அறைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி சரியான வாஸ்து நிபுணரை ஆலோசித்து சரியாக அந்தஸ்து பார்த்து கட்டுவோம். அப்பொழுது தான் அந்த கட்டிடம் நீண்ட நாட்களுக்கு நமக்கு நன்மைகளை தரும்.
 
இப்படி நாம் தவறாமல் பார்க்கும் வாஸ்துவிற்கும் பஞ்ச பூதங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்துக்கொள்வோம். நம் வாழும் வாழ்க்கையில் வெறும் பணம்  மட்டும் இருந்தால் போதுமா? மகிழ்ச்சி என்பதும் வேண்டும். 
 
மேற்கூறிய இரண்டும் சமமாக இருந்தால் நாம் வாழும் வாழ்க்கை அழகாக இருக்கும். அதுபோலத்தான் காற்று, நீர், நெருப்பு, பூமி, வானம் இந்த பஞ்ச பூதங்களும் சமமாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த ஐந்தும் தான் வாஸ்துவில் மிக மிக முக்கியம். 
 
நாம் வீடு கட்டும் போது இந்த பஞ்ச பூதங்களை தான் முன் உதாரணமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அதாவது ஒருவரது வாழ்க்கை சமநிலையாலேயே முழுமை பெறுகிறது. எனவே தான் வாஸ்துவை நாம் பஞ்ச பூதங்களுடன் ஒப்பிடுகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments