Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பயனுள்ள வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்...!

Webdunia
வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6-வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.
daily
மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும். கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும். 
 
வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும். தெற்கு  உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
 
வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.
வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் கிழக்கில் தான் குளியல் அறை  அமைத்தல் வேண்டும்.
 
வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு  இருத்தல் வேண்டும்.
 
வீட்டின் வடக்கில் தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல் வேண்டும். வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இறைவழிபாடு, தியானம் செய்தல்  உயர்வானது.
 
எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது. தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.
 
தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.
 
வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments